மதுரையில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சிறப்பு எஸ்.ஐ. கைது

5 months ago 25

மதுரை,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கிரிவலப்பாதையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. ஜெயபாண்டியன், அங்கு கழிவறைக்கு சென்ற 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிறார் நலன் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் மகளிர் போலீசார் சிறுமியிடம் நடந்தவை குறித்து கேட்டறிந்தனர். இதில், சிறப்பு எஸ்.ஐ. ஜெயபாண்டியன், சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனை தொடர்ந்து ஜெயபாண்டியன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

 

Read Entire Article