மதுரை, பிப். 15: மதுரை ரயில் நிலையத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம், பயணியர் தங்குவதற்கான நவீன வசதிகளுடன் கூடிய அறைகள், கூடுதல் வசதிகளுடன் ஓய்வு அறை உள்ளிட்ட பல்வேறு கட்டடமைப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் மறுசீரமைப்புப் பணிகள் மற்றும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து திகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா, தலைமை பொறியாளர் (கட்டுமானம்) கே.ஜி.ஞானசேகர் மற்றும் மதுரை கோட்டத்தைச் சேர்ந்த பொறியாளர்கள், கட்டுமான நிறுவனத்தினர் உடனிருந்தனர்.
The post மதுரை ரயில் நிலையத்தில் ஆய்வு appeared first on Dinakaran.