மதுரை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் கட்ட நகரங்களான மதுரை கோவையில் மெட்ரோ ரயில் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்திருந்தது. இதில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ரூபாய் 1178.35 கோடி மதிப்பீட்டில் முதற்கட்டமாக திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு இதில் திருமங்கலம் வசந்தி நகர் வரை உயர்நிலை மேம்பாலமும், வசந்த நகர் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை சுரங்கப்பாதையும், தல்லாகுளம் ஒத்தக்கடை வழியாக உயர்நிலை மேம்பாலம் வழியாகவும் மெட்ரோ பாதை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை மெட்ரோ திட்டத்திற்கான விரிவான சாத்திய கூறு அருகே மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு அனுமதிக்காக காத்திருக்கிறது. இதற்கிடையில் மதுரை மெட்ரோ திட்டத்திற்கு முதற்கட்டமாக பல தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்து நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றிற்கு உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெறுதல் ஒப்பந்தம் செய்தல் போன்ற பல்வேறு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில் இதுகுறித்து மெட்ரோ இயக்குநர் மதுரையில் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது; மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.11,300 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் தெரிவித்துள்ளார். கோயிலில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் பணிகள் நடைபெறும். இதனால் எந்த பாதிப்பும் இருக்காது. ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்த பின்புதான் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிறுத்தம் அமைப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.11,300 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது: மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் பேட்டி appeared first on Dinakaran.