மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க பல்வேறு இடையூறுகளை செய்கின்றனர். மாநாட்டுக்கு அனுமதி மறுத்தால் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் மைதானத்தில் நாளை (ஜூன் 8) நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இந்த கூட்டத்துக்கான பந்தல்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: