பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு நடந்த 2வது அரையிறுதியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் 23 வயது ஜானிக் சின்னர், 6வது ரேங்க் வீரரான செர்பியாவின் 38 வயது ஜோகோவிச் மோதினர்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னர் 6-4, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தார். முன்னதாக நடந்த மற்றொரு அரையிறுதியில் 2வது ரேங்க் வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், 8ம் நிலை வீரரான இத்தாலியின் லோரென்சோ முசெட்டி மோதின. இதில் முதல் செட்டை 4-6, என இழந்த அல்காரஸ் அடுத்த 2 செட்டை 7-6, 6-0 என கைப்பற்றினார். 4வது செட்டில் 2-0 என அல்காரஸ் முன்னிலையில் இருந்தபோது காயத்தால் முசெட்டி வெளியேறினார். இதனால் அல்காரஸ் பைனலுக்கு தகுதி பெற்றார். நாளை இறுதி போட்டியில் சின்னர்-அல்காரஸ் மோதுகின்றனர்.
மகளிர் பைனலில் இன்று சபலென்கா – காப் மோதல்
மகளிர் ஒற்றையரில் இன்று மாலை 6.30 மணிக்கு நடக்கும் இறுதி போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 2வது ரேங்க் அமெரிக்காவின் கோகோ காப் மோதுகின்றனர். இதில் வெற்றி பெறுபவருக்கு 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளுடன், ரூ.25.14 கோடி பரிசு தொகை வழங்கப்படும்.
The post பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ஜோகோவிச்சை வீழ்த்தி பைனலுக்கு சின்னர் தகுதி appeared first on Dinakaran.