மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்

3 hours ago 3

சென்னை,

உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு மதுரை வருகை தந்தார். மதுரை ஒத்தகடையில் இன்று மாலை நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.  அமித்ஷா வருகையை ஒட்டி மதுரையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை ரிங் ரோடு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள அமித்ஷா, தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்து வருகிறார். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா நடத்திய  ஆலோசனை க்கியத்துவம் பெற்றுள்ளது.இந்த ஆலோசனைக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அமித்ஷா வருகையை ஒட்டி கோவிலுக்கு பக்தர்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. கோவிலில் சாமி தரிசனம் செய்த அமித்ஷாவுக்கு  கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 

Read Entire Article