மதுரை மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

3 months ago 7

மதுரை, பிப். 8: மதுரையில் ஒரே நாளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தாமரை விஷ்ணு, மதுரை நகர் உளவு பிரிவிற்கும், மதிச்சியம் இன்ஸ்பெக்டர் முகம்மது இத்ரிஸ் கரிமேட்டிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இரேபோல் செல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மணிகண்டன், செல்லூர் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும், தீவிர குற்றத்தடுப்பு இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி, செல்லூர் குற்றப்பிரிவிற்கும், திருப்பரங்குன்றம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேதவள்ளி, மதிச்சியம் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவேனில், திருப்பரங்குன்றம் குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் பிறப்பித்துள்ளார்.

The post மதுரை மாநகரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article