சென்னையில் 73 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு

4 hours ago 2

சென்னை,: சென்னையில் 73 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்த உத்தரவு:
வேளச்சேரி சட்ட ஒழுங்கில் இருந்த விமல் மீன்பிடி துறைமுக சட்ட ஒழுங்கிற்கும், திருவொற்றியூர் குற்றப்பிரிவில் இருந்த ஆனந்தபாபு ராமபுரம் சட்ட ஒழுங்கிற்கும், அண்ணாசதுக்கம் குற்றப்பிரிவில் இருந்த விஜயரங்கன் கோயம்பேடு சிஎம்பிடி சட்ட ஒழுங்கிற்கும், சென்னை பாதுகாப்பு பிரிவில் இருந்த சிவக்குமார் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், திருமங்கலம் குற்றப்பிரிவில் இருந்த ரத்னகுமார் கே.கே.நகர் சட்ட ஒழுங்கிற்கும், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலையத்தில் இருந்த பத்மாவதி கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் இருந்த ரத்னவேல் பாண்டியன் ஏழு கிணறு சட்ட ஒழுங்கிற்கும், அதிதீவிர குற்றப்பிரிவு (வடக்கு) தர் கீழ்ப்பாக்கம் சட்ட ஒழுங்கிற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் துரைப்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த ராஜேந்திரன் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், நத்தம்பாக்கம் சட்ட ஒழுங்கில் இருந்த ராஜேஷ்கண்ணா ஆயிரம் விளக்கு சட்ட ஒழுங்கிற்கும், ஐசிஎப் சட்ட ஒழுங்கில் இருந்த மோகன் மெரினா சட்ட ஒழுங்கிற்கும், புளியந்தோப்பு குற்றப்பிரிவில் இருந்த அம்பேத்கர் மயிலாப்பூர் சட்ட ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயராம் வேளச்சேரி சட்ட ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த முத்துமாரி ேதவேந்திரர் கிண்டி சட்ட ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்ணன் ஐகோர்ட் சட்ட ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரபு யானைக்கவுனி சட்ட ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த முருகராஜ் நுங்கம்பாக்கம் சட்ட ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சமயசுல்தானா எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த மகேஷ்வரி வேப்பேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த உமா மகேஷ்வரி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கார்த்தி அதிதீவிர குற்றப்பிரிவு (தெற்கு), காத்திருப்போர் பட்டியலில் இருந்த கமலக்கண்ணன் மீனம்பாக்கம் சட்ட ஒழுங்கிற்கும், கிண்டி சட்ட ஒழுங்கில் இருந்த பிரபு ஆர்.கே.நகர் சட்ட ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியிலில் இருந்த புஷ்பா அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், மீனம்பாக்கம் சட்ட ஒழுங்கில் இருந்த தன்ராஜ் ஐசிஎப் சட்ட ஒழுங்கு உட்பட சென்னை பெருநகர காவல்துறையில் 73 இன்ஸ்ெபக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்னையில் 73 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article