கோவையில் 5 நாட்கள் நடக்கிறது; 1000 மாணவ மாணவியருக்கு திறன் தேடல் பயிற்சி

1 hour ago 3

சென்னை: பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசுப் பள்ளி மாணவ மாணவியரின் திறன்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2023ம் ஆண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு முடித்த மாணவர்களில் மேற்கண்ட திறமைத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1000 பேருக்கு பயிற்சிப் பட்டறை வகுப்புகள் கோவை மாவட்டம் காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் 24ம் தேதி முதல் 28ம் தேதி நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இந்த பயிற்சி முகாமுக்கு கலந்து கொள்ள உள்ள மாணவர்கள் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்பட்ட ஆளறிச்சான்றுகளுடன் பங்கேற்க வேண்டும். மாணவர்களுடன் முகாமுக்கு வரும் பொறுப்பாசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் வழங்கப்படும் ஆளறிச் சான்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த பயிற்சி முகாமில் சென்னையில் இருந்து 72 மாணவ மாணவியர், திருவள்ளூர் 17, காஞ்சிபுரம் 15, செங்கல்பட்டு 17 மாணவ மாணவியர் உள்பட 1000 பேர் பங்கேற்க உள்ளனர்.

The post கோவையில் 5 நாட்கள் நடக்கிறது; 1000 மாணவ மாணவியருக்கு திறன் தேடல் பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article