மதுரை, மே 21: மதுரை மாநகரில் 13,662 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் புதிய மின் இணைப்புகள் விரைவாகவும், சுலபமாகவும் தங்குதடையின்றி வழங்கப்படுகிறது. இதன்படி, புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவுடன், புதிய மின் இணைப்பும் கிடைக்கிறது. அதே நேரம் நகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, புதிய மின் இணைப்பின் தேவையும் அதிகரிக்கிறது. மதுரை மாநகர் பகுதியில் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் என யார் ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் 24 மணிநேரத்திற்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்படுகிறது, மின்பாதை மற்றும் மின் கம்பம் அருகில் இல்லாமல் சற்று தொலைவில் இருந்தால் 15 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
மதுரை மாநகர பகுதிகளில் கடந்த 2024-25ம் ஆண்டில் புதிய மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களில், இதுவரை 13,662 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், மதுரை மாவட்டத்திற்குட்பட்ட கிராமப் பகுதியில் வசிக்கும் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடந்த 2024-25ம் ஆண்டில் இதுவரை புதியதாக 254 புதிய இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு சாதாரண மின் இணைப்பு திட்டத்தில் 26, திருத்தப்பட்ட சுயநிதிதிட்டத்தில் 24, தாட்கோ துரித மின் இணைப்பு திட்டத்தில் 15, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்டத்தின் கீழ் 24, தட்கல் திட்டத்தின் கீழ் 157 புதிய இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
The post மதுரை மாநகரில் 13,662 புதிய மின் இணைப்புகள்: ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் கனெக்சன் appeared first on Dinakaran.