மதுரை: மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற உதவி ஆணையர் உட்பட 5 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி ஆணையராக தினேஷ்குமார் இருந்தபோது வரி வசூல் தொடர்பாக திடீர் ஆய்வு நடத்தினார். அதில் 2022, 2023-ம் ஆண்டுகளில் வரி வசூல் முறைகேட்டால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து மத்திய குற்றப் பிரிவினர் மற்றும் சைபர் கிரைம் போலீஸார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.