சென்னை: சென்னை, பூந்தமல்லியில் நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, ‘‘எத்தனை நெருக்கடிகள், துரோகங்கள், அத்தனைக்கும் மத்தியில்தான் 31 ஆண்டுகளாக மதிமுகவை பாதுகாத்து வருகிறேன். திருச்சி திமுக மாநாட்டிற்கு செல்லாமல் போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு’’ என்றார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். ‘‘வைகோவை தனிப்பட்ட முறையில் ரொம்ப பிடிக்கும். ஆனால் வைகோ நன்றியை மறந்துவிட்டு பேசுவது நல்லதல்ல. அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகு தான் மதிமுகவுக்கு அங்கீகாரமே கிடைத்தது’’ என கூறியுள்ளார்.
The post வைகோவுக்கு ஜெயக்குமார் பதில் மதிமுகவுக்கு அங்கீகாரம் அதிமுகவால்தான் கிடைத்தது appeared first on Dinakaran.