பாமக உறுப்பினர் சேர்க்கையை விரைவுப்படுத்த வேண்டும்: அன்புமணி கடிதம்

3 hours ago 2

சென்னை: பாமக 37வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்டமைப்பை விரைவுபடுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாமக வரும் ஜூலை 16ல் 36 ஆண்டுகளை நிறைவு செய்து 37ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவதில் அன்றும், இன்றும் பாமக உண்மையான எதிர்க்கட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றால் பாமக வலிமையாக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகத் தான் பாமகவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைத்தல் ஆகிய பணிகளை தொடங்கியிருக்கிறோம்.

உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். சமூக நீதிக்கான உரிமை உள்ளிட்ட 10 உரிமைகளை தமிழக மக்களுக்கு மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ராமதாசின் பிறந்த நாளான ஜூலை 25ம் தேதி முதல் தமிழ்நாடு நாளான நவம்பர் ஒன்றாம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். பாமகவின் தொடக்கவிழாவை அனைத்து கிளைகளிலும் குறைந்தது ஓர் இடத்திலாவது முறையான அனுமதி பெற்று கொடிக்கம்பம் அமைத்து பா.ம.க. கொடியேற்றி கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பாமக உறுப்பினர் சேர்க்கையை விரைவுப்படுத்த வேண்டும்: அன்புமணி கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article