மதுரை: மதுரை- போடி மின் மயமாக்கல் பணி ஓரளவுக்கு நிறைவுற்ற போதிலும், ரயில்வே லைன் மேலே செல்லும் மின் கம்பிகள், உபகரணங்களில் குறைபாடுகளை கண்டறியும் விதமாக ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் இன்று நடந்தது.
மதுரை - போடி இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதை திட்டம் 2010 தொடங்கி நடந்தது. 2022-ம் ஆண்டு மே 26-ல் இப்பாதையில் மீண்டும் ரயில் ஒட தொடங்கியது. இதைதொடர்ந்து அதிகபட்சமாக மதுரையில் இருந்து தேனி வரையிலும் 100 கி.மீ வேகத்திலும், தேனியில் இருந்து போடிக்கு 90 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. மதுரையில் இருந்து போடிக்கு 143 கிலோ மீட்டர் வழித்தடத்தில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கி ஆய்வு செய்தனர்.