மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர்

4 months ago 15

தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதை அடுத்து சவுக்கு சங்கரை மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.

கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்ததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சவுக்கு சங்கரை சென்னையில் செவ்வாய்க்கிழமை கைது செய்த தேனி போலீஸார், புதன்கிழமையன்று காவல் நிலையத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக கடந்த மே 4-ம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோயமுத்தூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.‌

Read Entire Article