சென்னை: மதுரை, திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி அளித்தது. திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது. பஞ்சப்பூரில் 14.16 ஏக்கரில் ரூ.315 கோடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் டைடல் பூங்கா அமைய உள்ளது. மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே 9.97 ஏக்கரில் ரூ.289 கோடியில் டைடல் பார்க் கட்ட திட்டம். ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் டைடல் பார்க்கில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
The post மதுரை, திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளித்தது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் appeared first on Dinakaran.