மோடி அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து.. அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிக்கிறது இந்தியா கூட்டணி: துணை முதல்வர் உதயநிதி!!

3 hours ago 3

சென்னை: மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது என துணை முதல்வர் உதயதிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் திமுக சட்டத்துறையின் 3-வது ஒரு நாள் மாநில மாநாடு தொடங்கியது. திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டை பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். 50 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த வழக்கறிஞர்களான நினைவில் வாழும் தி.மு.க. முன்னாள் பொருளாளர் எஸ்.ஜே.சாதிக் பாட்ஷா, பிடிஆர் பழனிவேல் ராஜன், ஏ.எல்.சுப்ரமணியம், அ.அ.ஜின்னா ஆகியோர் பெயரில் தோரண வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான காவலர் பேராசிரியர் ஆகியோரின் திருவுருவப்பட திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது.

அதன்பின் இம்மாநாட்டில் முதல் அமர்வாக “ஒரு நாடு ஒரு தேர்தல்” என்கிற தலைப்பில் நடைபெறும் ஆங்கில கலந்துரையாடல் நடைபெறும். இரண்டாவது அமர்வில் `திராவிடவியல்’ என்ற புதுமையான தலைப்பில் திராவிட இயக்கம் தமிழ்மண்ணிற்கு ஆற்றிய அரும்பணிகள் குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது. அதன்பின்னர் நடைபெறும் 3-வது அமர்வில் “இந்திய மக்களாகிய நாம்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்துரை நிகழ்வு நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் நிறைவு அமர்வாக நடைபெறும் அரசியல் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவுரையாற்றுகிறார்.

இந்நிலையில், திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாட்டில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்; மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன். பல முக்கியமான வழக்குகளில் ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து, உரிமைகளை வென்றது திமுக சட்டத்துறை.

மேலும், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோஷலிசம் போன்றவற்றை தகர்க்கும் முயற்சியில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மோடி அரசுக்கு எதிராக அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிக்கிறது இந்தியா கூட்டணி. கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்து போராடி வருகிறோம். ஒன்றிய பாஜக அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திமுக சட்டத்துறை தொடர்ந்து எதிர்த்து வருகிறது என துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார்.

The post மோடி அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து.. அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிக்கிறது இந்தியா கூட்டணி: துணை முதல்வர் உதயநிதி!! appeared first on Dinakaran.

Read Entire Article