மதுரை – சிவகங்கை இடையே ரூ. 342 கோடி முதலீட்டில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா : 36,500 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு!!

3 hours ago 3

மதுரை : மதுரை – சிவகங்கை இடையே உள்ள இலுப்பைக்குடியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா ரூ. 342 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு 2030 ஆண்டுக்குள் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த முக்கியமான இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கை அடைய சென்னை மட்டுமல்லாது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் புதிய முதலீடுகளையும் புதிய தொழிற்பூங்காக்களையும் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் அதிகம் வளர்ச்சியடையாத சிவகங்கை மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த புதிய தொழிற்பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய சிப்காட் தொழிற்பூங்கா மதுரை – சிவகங்கை மாவட்டத்திற்கு இடையே இலுப்பைக்குடி, கிளத்தாரி மற்றும் அரசனூர் பகுதிகளை உள்ளடக்கிய 775 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவில் நிறுவ சிப்காட் திட்டமிட்டுள்ளது. ரூ.342 கோடி முதலீட்டில் இந்த தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இது உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் வசதிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும். ஏற்கனவே மதுரையில் ELCOT ஐடி பார்க் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டம் மதுரை – சிவகங்கை மாவட்டத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும். இந்த தொழில் பூங்கா மூலம் 36,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த ஆண்டு திறக்கப்படும், இந்த தொழிற்பூங்காவில், ஆட்டோமொபைல் மற்றும் டெக்ஸ்டைல் போன்ற முக்கிய
துறைகளுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மதுரை – சிவகங்கை இடையே ரூ. 342 கோடி முதலீட்டில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா : 36,500 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article