
மதுரை,
மதுரை அருகே கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருக்கல்யாண திருவிழா நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில் வரும் 11ஆம் தேதி காலை 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் திருக்கல்யாண திருவிழா வேத மந்திரங்களுடன் நடைபெறும்.
இந்நிகழ்வில் பெரியாழ்வார் முன்னிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் ஒரே நேரத்தில் கள்ளழகர் பெருமாள் திருமணம் செய்து கொள்ளும் விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.