மதுரை அவனியாபுரம் அருகே காவலரை கத்தியால் குத்திய நபர் கைது

2 months ago 11
மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே கார் செல்வதற்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் காவலரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை, அமைந்தகரை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ராஜ்குமார் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டிக்கு செல்வதற்காக மண்டேலா நகர் சந்திப்பு பகுதியில் பேருந்திற்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து வெளியே வந்த கார் ஓட்டுநர் ஆறுமுகத்திற்கு வழிவிடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றி காவலர் ராஜ்குமாரை ஆறுமுகம் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
Read Entire Article