மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி

2 hours ago 2

சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உள்ள அரிட்டாபட்டி கிராமம் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தலமாக 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை உள்ளடக்கிய இந்த பகுதியில் சமணர் படுகை குடைவரை கோவில், வட்டெழுத்து கல்வெட்டு என ஏராளமான புராதன சின்னங்கள் உள்ளன.

இந்நிலையில், அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் அழகர் மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதித்ததாக செய்தி வெளியானது. டங்ஸ்டன் என்னும் கனிமவளங்கள் வெட்டி எடுப்பதற்கு 2015.51 ஹெக்டரில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதித்துள்ளதாக செய்தி வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் ஒன்றிய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி கூறியதாவது; அரிட்டாபட்டி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாடு அரசுக்கு இதுவரை விண்ணப்பம் ஏதும் வரவில்லை. அப்படி விண்ணப்பித்தாலும் அதனை தமிழ்நாடு அரசு நிராகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

The post மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article