மதுரையைச் சேர்ந்த வட்டச் செயலாளர் உதயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு

2 hours ago 2

சென்னை: மதுரை வடக்கு 2-ம் பகுதி 15 கிழக்கு வட்டச் செயலாளர் எம்.உதயகுமார் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் பதவி நீக்கம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், மதுரை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த . M. உதயகுமார், (15 கிழக்கு வட்டக் கழகச் செயலாளர், பிள்ளையார் கோயில் தெரு, ஜவஹர்புரம், மதுரை வடக்கு 2-ஆம் பகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post மதுரையைச் சேர்ந்த வட்டச் செயலாளர் உதயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article