மதுரை, மார்ச் 15: மதுரை அமெரிக்கன் கல்லூரியில், உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை தாங்கி துவங்கி வைத்து பேசினார். ரியோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சரவணன் சிறப்புரை ஆற்றினார். இதில் முதுகலை துறைத் தலைவர் பிரியதர்ஷினி மற்றும் இளங்கலை துறைத் தலைவர் கிரேஸியா ஆகியோர் பங்கேற்றனர்.
முதல் நாளில் சிறப்பு அழைப்பாளர்களாக அமெரிக்காவிலிருந்து முனைவர் தெய்வநாயகம் சாம்பியன் மற்றும் முனைவர் ராமலிங்கம், முனைவர் ஜெயலட்சுமி ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். அடுத்த நாளில் மலேசியாவில் இருந்து ஆண்டோ கார்டிலியா, முனைவர் சங்கர் கணேஷ் மற்றும் நாராயணசாமி சங்கீதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். 438 மாணவர்கள் பங்கேற்ற இக்கருத்தரங்கில், 210 ஆராய்ச்சிக் கட்டுரைகளுடன் கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது. மலேசியாவின் மாஷா பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்ட இதில் 29 கல்லூரிகள் பங்கேற்றன. சிறப்பான பங்களிப்பை வழங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
The post மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஊட்டச்சத்து துறையில் சர்வதேச கருத்தரங்கம் appeared first on Dinakaran.