சிவகங்கை: ரூபாய் குறியீடு ஒரு பிரச்சினையே இல்லை. அவரவர் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை மாநில அரசு ஏற்பதாக பட்ஜெட்டில் அறிவித்ததை வரவேற்கிறேன். இனிமேலாவது மத்திய அரசு வெட்கப்பட்டு, தமிழகத்துக்கு உரிய நிதியை ஒதுக்கும் என நம்புகிறேன்.