மதுராந்தகத்தில் 42வது வணிகர் மாநாடு பணிகள் மும்முரம்: விக்கிரமராஜா ஆய்வு

4 hours ago 2

மதுராந்தகம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புன் 42வது வணிகர் மாநாடு மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மாநாடு குறித்த ராட்சச விளம்பர பலூனை பறக்க விட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், மே 5 வணிகர் தினத்தன்று 42வது வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். இந்த மாநாடு நடைபெற உள்ள மதுராந்தகத்தில் கடந்த சில வாரங்களாக இரவு பகலாக அந்த பகுதியில் மாநாடு பந்தல் அமைக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அங்கமான பழைய பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில், மாநாடு நடைபெறும் இடத்தில் மாநாடு எழுச்சி குறித்து வாசகத்துடன் ராட்சச பலூனை பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பறக்கவிட்டு மாநாட்டு திடலில் நடைபெற்ற வரும் பணியினை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் மே 5ம் தேதி வணிகர் தின 42வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு வணிகர் கோரிக்கை பிரகடன மாநாடு என பெயரிட்டு உள்ளோம். இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளிமாநில வணிகர்கள் வருகை தர உள்ளனர். இந்த மாநாடு வணிகர்களை மீட்டு எடுக்கவும் வணிகர்களை நலன் காக்கவும் நடைபெற உள்ள மாநாடாகும்.

இந்த மாநாட்டுக்கு வரும் வணிகர்கள் எளிதில் மாநாட்டின் திடலை காண்பதற்காக பழைய பொருள் அணியின் சார்பில் மாநாட்டு திடலில் மிக உயரத்திற்கு பலூனை நிறுவி உள்ளனர். 57 ஏக்கரில் நடைபெற உள்ள இந்த மாநாடு தமிழக வணிகர்களை ஒன்று திரட்டும் ஒற்றுமை காக்கும் மாநாடாக இருக்கும் இதுவரை சாமான்ய வணிகர்களான பெட்டிக்கடை மளிகை, கடை வணிகர்கள் 20 சதவீதம் வணிகர்கள் குறைந்துள்ளனர்.

இதற்கு டி மார்ட் கொடுக்கும் நெருக்கடியால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வருகின்ற ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வணிகர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பார்கள். இவர்களை காப்பாற்றவும் இவர்களை தக்க வைத்துக் கொள்ளவும் ஒரு தீர்வு ஏற்படுத்தும் இந்த மாநாடாக இருக்கும். நடைபெற்ற சட்டமன்றத்தில் சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி என அறிவித்திருந்தார். அதே சமயம் வணிகர்கள் எதிர்பார்த்ததை வருகின்ற மாநாட்டில் முதலமைச்சர் கட்டாயம் அறிவிப்பார்.

எங்களுடைய நலன் காப்பார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் கொண்டுவந்துள்ள கட்டாய கடன் வசூல் இருக்கக் கூடாது என அறிவித்துள்ளது. சாமானிய மக்களையும் சாமானிய வணிகர்களையும் காக்கும் பாதுகாப்பு சட்டமாக இது அமைந்துள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகள் வங்கிகள் ரவுடிகளை வைத்து கொண்டு இந்த கட்டாய வசூலில் ஈடுபடுவோருக்கு இந்த சட்டம் ஒரு செக் வைப்பது போல் ஆகும்.

இது ஒரு அற்புதமான சட்டம் அராஜகத்திற்கு எதிரான சட்டம் இதற்காக அரசுக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இச்சட்டத்தை காவல்துறையினர் முறையாக கையாண்டு அரசையும் மக்களையும் வணிகர்களையும் காப்பாற்றும் என எதிர்பார்க்கிறேன்’ என்றார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் ஹாஜிஏ.எம். சதக்கத்துல்லா, சென்னை மாநகர பழைய பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் இ. எம்.ஜெயக்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி பிரதாப் ராஜா, கோவை மண்டல இளைஞரணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன், விழா குழுவினர் பவித்ரா சீனிவாசன், ராஜசேகரன், ரத்னா சுதாகரன், கஸ்தூரி சீனிவாசன், செல்வம், ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

The post மதுராந்தகத்தில் 42வது வணிகர் மாநாடு பணிகள் மும்முரம்: விக்கிரமராஜா ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article