மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறல் மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய்: சாக்கு பைகளில் கட்டி கால்வாயில் வீச்சு

1 week ago 3

திருமலை: ஆந்திராவில் மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறிய மகனை, மற்றொரு மகனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய், உடல் பாகங்களை சாக்கு பைகளில் கட்டி கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மேதாரா பஜார் அருகே கால்வாய் உள்ளது. இதன் அருகே கடும் துர்நாற்றத்துடன் மூன்று பைகள் உள்ளதாக அப்பகுதி மக்கள் நேற்றுமுன்தினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த மார்க்கபுரம் டிஎஸ்பி நாகராஜு தலைமையிலான போலீசார் கால்வாயில் கிடந்த பைகளை மீட்டு பார்த்தார். அப்போது அந்த பைகளில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை தொடங்கினர். அதில் பிரகாசம் மாவட்டம், கம்பத்தில் உள்ள தெலுங்கு தெருவில் வசிக்கும் ஷ்யாம்(35) கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வீசியது கண்டுபிடித்தனர். மேலும் சொத்து தகராறு காரணமாக இந்தக்கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால் போலீஸ் விசாரணையில், பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மதுவுக்கு அடிமையான ஷியாம் போதையில் இருக்கும்போது தனது உறவுமுறைகளை மறந்து பெண்களிடம் அத்துமீறி நடக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் அவரது தொல்லை தாங்க முடியாமல் தாய் சாலம்மா, தனது மகன் சுப்பிரமணியம் மற்றும் அருகிலுள்ள ஆட்டோ டிரைவர் மோகன் ஆகியோருடன் சேர்ந்து ஷியாமை கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டிக்கொன்றதும், உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசியதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுபோதையில் பெண்களிடம் அத்துமீறல் மகனை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற தாய்: சாக்கு பைகளில் கட்டி கால்வாயில் வீச்சு appeared first on Dinakaran.

Read Entire Article