மதுபான ஆலை ஊழலால் புதுச்சேரியிலும் பிரளயம்! - ‘கமுக்க’ ரங்கசாமி... ‘கலகக் குரல்’ நாராயணசாமி!

5 hours ago 2

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக-வினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், புதுச்சேரியில் புதிதாக மதுபான ஆலைகளுக்கு அனுமதியளித்ததில் மெகா ஊழல் நடந்திருப்பதாக என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக கர்ஜித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். புதுச்​சேரியில் புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகள் தொடங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்த போதே, திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்​பியது.

ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜக எம்எல்​ஏ-க்​களும் பாஜக ஆதரவு சுயேச்​சைகளும் இதை எதிர்த்தன. புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி​யளித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என துணை நிலை ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தது காங்கிரஸ்.

Read Entire Article