*5 பேருக்கு மறுவாழ்வு
கோவை : திருப்பூர் மாவட்டம் வெள்ளியம்பதி, ஸ்ரீ அம்மன் நகர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரவு, தனலட்சுமி தம்பதிகள். இவர்களது மூத்த மகன் ராம்தர்ஷன் (20). இவர், திருப்பூரில் கடந்த 19-ம் தேதி நண்பருடன் பைக்கில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக கடந்த 20ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தெடார் சிகிச்சை அளித்து வந்த நிலையில், ராம்தர்ஷன் மூளைச்சாவு அடைந்தார். இதனை டாக்டர்கள் உறுதி செய்தனர். பின்னர், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராம்தர்ஷன் உடலை தானமாக அளிக்க முன்வந்தனர்.
இதையடுத்து, மூளைச்சாவு அடைந்த ராம்தர்ஷனின் கல்லீரல், 2 சிறுநீரகம், கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது. இதில், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொன்று சேலம் அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.
பின்னர், ராம்தர்ஷன் உடலுக்கு மருத்துவமனையின் டீர் நிர்மலா மற்றும் ஆர்.எம்.ஓ., மருத்துவமனை ஊழியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
The post மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.