மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அலுவலர்கள் அணுகல் தன்மை குறித்து பயிற்சி

12 hours ago 2

*மாவட்ட கலெக்டர் அருணா துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், பல்வேறு துறையின் மாவட்ட நிலை அலுவலர்களுக்கான அணுகல் தன்மை இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் குறித்த ஒரு நாள் பயிற்சியினை, மாவட்ட கலெக்டர் அருணா துவக்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் அருணா பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை முன்னேற்றும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்குதல், அரசு நலத்திட்ட உதவிகள் சென்று சேர்ந்திடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், பல்வேறு துறையின் மாவட்ட நிலை அலுவலர்களுக்கான அணுகல் தன்மை 2021 -ன் இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ், உலகளாவிய அணுகலுக்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகளின் அடிப்படையில் அணுகல் தன்மை குறித்து அரசு அலுவலர்கள், அரசு பொறியாளர்கள் மற்றும் தனியார் கட்டுமான சங்க பொறியாளர்களுக்கு அக்லுட் இன்ஜினியரிங் அமைப்பு மூலமாக பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு வாரியம், பொறியாளர்கள், தனியார் கட்டுமான சங்க பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். எனவே, இப்பயிற்சியினை நல்ல முறையில் மேற்கொண்டு சிறப்பான பணிகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.

The post மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அலுவலர்கள் அணுகல் தன்மை குறித்து பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article