மதுக்கூர் அருகே கல்யாணபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

5 hours ago 1

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்யாண ஓடை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ கல்யாணபுரீஸ்வரர் திருக்கோவில். இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை யாக சாலை பூஜைகள் நிறைவடைந்தன. அதன்பின், கடம் புறப்பாடு நடைபெற்றது. புண்ணிய நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்களை, மேளதாளங்கள் முழங்க மங்கள இசையுடன் சிவாச்சாரியார்கள் சுமந்து வந்தனர்.

பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கருட பகவான் வானில் வட்டமிட, குடங்களில் கொணடு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் கும்பத்தில் ஊற்றி அபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ட்ரோன் மூலமும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து மூலஸ்தான மகாபிஷேகம் நடைபெற்று தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது.

Read Entire Article