
டெல்லி,
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றிபெற்றது. 2013ம் ஆண்டு முதல் டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்தது. ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முன்னாள் முதல்- மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேர்தல் பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து டெல்லி முதல்-மந்திரியாக அக்கட்சியின் ரேகா குப்தா பதவியேற்றார்.
இந்நிலையில், மதுக்கடைகளை திறந்ததாலேயே தேர்தலில் கெஜ்ரிவால் தோல்வியடைந்ததாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹசாரே கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் தொடக்க காலத்தில் டெல்லி முதல்-மந்திரியாக இருந்தபோது சிறப்பாக செயல்பட்டார். அவர் 3 முறை டெல்லி முதல்-மந்திரியாக தேர்வானார். அவர் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு எதிராக நான் எதுவும் பேசவில்லை. ஆனால், டெல்லியில் மதுபான கடைகளை திறப்பது, மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் கெஜ்ரிவால் ஈடுபட்டார். தேர்தலில் கெஜ்ரிவால் தோல்வியடைய அதுவே காரணம்' என்றார்.