மதியம் 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

4 weeks ago 7

சென்னை,

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நாளை மறுதினம் (சனிக்கிழமை) நெல்லூர் அருகில் சென்று மீண்டும் வட தமிழகத்தை நோக்கி, 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நகர்ந்து வந்து 23, 24-ந் தேதிகளில் டெல்டா-வட இலங்கை வழியாக உள் மாவட்டங்களை கடந்து அரபிக்கடலுக்கு செல்ல இருக்கிறது. இப்படியாக போக்கு காட்டிச் செல்லும் இந்த நிகழ்வால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article