மதவழிபாட்டு தலத்தில் கூட்ட நெரிசல் - 3 பெண்கள் பலி

4 months ago 15

டமாஸ்கஸ்,

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் உம்யத் மசூதி என்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மசூதியில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். அதன்பின்னர், மசூதியில் இலவச விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பட்டு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக மதவழிபாட்டு தலத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 5 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த மருத்துவக்குழுவினர் படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read Entire Article