மண்டபம் அருகே கடலில் விடப்பட்ட 2.1 மில்லியன் இறால் குஞ்சுகள்

1 month ago 4

மண்டபம்: மண்டபம் அருகே, மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் சார்பில் 2.1 மில்லியன் பச்சைவரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், மரைக்காயர்பட்டினம் பகுதியில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இதன் மூலம் மீனவர்களை ஊக்குவிக்க கடலில் கூண்டு அமைத்து மீன் வளர்த்தல், பச்சை வரி இறால் குஞ்சுகள் வளர்த்தல், கூண்டு பாசி வளர்ப்பு ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பொரிப்பகங்களில் 2.1 மில்லியன் பச்சை வரி இறால் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த இறால் குஞ்சுகளை கேன்கள் மூலம் நாட்டுப்படகில் கொண்டு சென்று, மரைக்காயர்பட்டினம் மன்னார் வளைகுடா கடலில் விடுவித்தனர்.

The post மண்டபம் அருகே கடலில் விடப்பட்ட 2.1 மில்லியன் இறால் குஞ்சுகள் appeared first on Dinakaran.

Read Entire Article