திருப்பூர், பிப்.21:திருப்பூர், காங்கயம், சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவர் குமரன் ரோட்டில் உள்ள புகைப்பட நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மணிகண்டன் தனது பைக்கை குமரன் ரோட்டிலுள்ள பிரபல ஜெராக்ஸ் கடை முன்பு நிறுத்தி விட்டு மீண்டும் திரும்ப வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மணிகண்டன் வடக்கு குற்றப் பிரிவு போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குமரன் ரோட்டில் பைக் திருட்டு appeared first on Dinakaran.