திருப்பூர், பிப்.21: ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (52). திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் பனியன் நிறுவனத்தில் பணி முடிந்து சொந்த ஊர் செல்வதற்காக அண்ணா நகர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்தவர்கள் பின்னே வரும் வாகனத்தை கவனிக்காமல் கார் கதவை வேகமாக திறந்தனர்.
அந்த நேரம் பாலகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற போது கார் கதவில் மோதி கழுத்தில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பாலகிருஷ்ணனை மீட்டு திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருமுருகன் பூண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
The post பைக் மோதி பனியன் தொழிலாளி பலி appeared first on Dinakaran.