கிருஷ்ணகிரி, பிப்.22: கிருஷ்ணகிரி மகராஜகடை எஸ்ஐ பாண்டியன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மகாராஜ கடை ஆத்துக்கால்வாய் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரியை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர். அதில், மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 லாரிகளையும் பறிமுதல் செய்து டிரைவர்களிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் பெத்தமேலுப்பள்ளியை சேர்ந்த சந்துரு (23), பெத்தம்பட்டி மணிவாசன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், மண்ணுடன் 2 டி்ப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த லாரிகளின் உரிமையாளர்களான கிருஷ்ணகிரி சத்யசாய் நகரை சேர்ந்த சுரேகா பாய், ராஜாராவ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.