டெல்லி: மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரசை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது;
“உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
நகர்ப்புற சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களில் 92% பேர் SC, ST, OBC பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று உங்கள் அரசாங்கத்தின் சொந்த கணக்கெடுப்பு கூறுகிறது.
SC, ST, OBC, EWS மற்றும் இதர அனைத்து வகுப்பினரும் என்னென்ன செயல்பாடுகளால் சம்பாதிக்கிறார்கள் என்பது அப்போதுதான் தெரியும் என்பதால், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பாஜக எதிரானது. அவர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலை என்ன? அரசு திட்டங்களின் எந்த வகையான இலக்கு பலன்களை அவர்கள் பெற வேண்டும்?
ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. இதை செய்து கொண்டே இருப்போம்” என தெரிவித்துள்ளார்.
The post மணிப்பூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல் appeared first on Dinakaran.