மணிப்பூரில் பரபரப்பு கவர்னர் மாளிகை அருகே கிடந்த கையெறி குண்டு

4 months ago 16

இம்பால்: மணிப்பூர் மாநிலம், மேற்கு இம்பாலின் கோட்ரூக் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் ட்ரோங்லவோபியில் நேற்று முன்தினம் இரவு 2 இடங்களில் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. லேய்காய் கிராமத்தில் நேற்றிரவு 7 மணியளவில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் வைத்து குக்கி போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில்,கவர்னர் மாளிகையில் இருந்து 100 மீ தொலைவில் உள்ள அரசு மகளிர் கல்லூரி கேட் அருகே கையெறி குண்டு நேற்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் விரைந்து சென்று அந்த கையெறி குண்டை அகற்றினர்.

The post மணிப்பூரில் பரபரப்பு கவர்னர் மாளிகை அருகே கிடந்த கையெறி குண்டு appeared first on Dinakaran.

Read Entire Article