
இம்பால்,
மணிப்பூரில் உள்ள இம்பால் கிழக்கு மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தின் காவல் எல்லைக்கு உட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, காங்லேய் யாவோல் கண்ணா லுப்(SOREPA) என்ற அமைப்பை சேர்ந்த ஓயினம் ரபிச்சந்திர சிங் (33) என நபர், சவோம்புங் பகுதியில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, கங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியை(PWG) சேர்ந்த முகமது இஸ்ராக் கான், கைராங் கிராமத்தில் கைது செய்யப்பட்டார்.
மேலும், ஆண்ட்ரோ காவல் நிலையப் பகுதியில் உள்ள நகாரியன் யெய்ரிபோக் சாலையில் மக்கள் விடுதலை ராணுவம்(PLA) அமைப்பை சேர்ந்த நபர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்தும் துப்பாக்கிகள், வெடிப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.