சென்னை,
தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம்', லவ்வர், குட் நைட் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். இவர் தற்போது 'நித்தம் ஒரு வானம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் 'குடும்பஸ்தன்' படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.
வரும் 24-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளநிலையில், டிரெய்லர் இன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.