திருவாரூர், பிப்.25: திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.பி கருண்கரட் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, ஆன்லைன் லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது, மணல் கடத்தல், திருட்டு, வழிபறி உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வரும் நிலையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டு வருபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று பேரளம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கொத்தவாசல் என்ற இடத்தில் திடல் ஒன்றில் ஜேசிபி இயந்திரம் மூலம் மணலை தோண்டி அதனை டிராக்டர் ஒன்றின் மூலம் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அதே ஊரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மாத்தையன் (34) மற்றும் திருவிழிமிழலை கிராமத்தை சேர்ந்த பழனிவேல் (23). ஜேசிபி டிரைவர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
The post மணல் கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.