மணலி தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.4.90 கோடியில் புதிய கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார்

3 months ago 19

திருவொற்றியூர்: மணலி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறைக்கு ரூ.4.90 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மணலி காமராஜர் சாலையில் 1974ம் ஆண்டு முதல் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை செயல்பட்டு வருகிறது. இதற்கான கட்டிடம் பலவீனம் அடைந்ததால் புதிய கட்டிடம் கட்ட ரூ.4.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 3 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்துமிடம், ஸ்கை லிட் இயந்திரம் நிறுத்தும் வசதி, அலுவலகம், ஓய்வுஅறை, உடற்பயிற்சி அறை போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் புதிய மூன்றடுக்கு கட்டிடம் கட்டப்பட்டது.

இப்பணிகள் முடிந்ததையொட்டி நேற்று காலை புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மணலி தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மண்டலக்குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், கவுன்சிலர் ராஜசேகர் மற்றும் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் தென்னரசு ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். நிகழ்ச்சியில் நிலையை அலுவலர்கள் வீரக்குமார், முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

The post மணலி தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.4.90 கோடியில் புதிய கட்டிடம்: முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article