குன்னூர் : குன்னூர் அருகே சுமார் 15 அடி பள்ளத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் தூக்கி வீசப்பட்ட கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.திருப்பூர் மாவட்டத்திலிருந்து 3 வாலிபர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கேரள மாநிலம் பதிவு எண் கொண்ட வாகனத்தில் நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு வந்தனர்.
குன்னூரில் பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பி கொண்டிருந்தனர். குன்னூர் மலைப்பாதையில் அவர்கள் சென்றபோது காட்டேரி சந்திப்பில் வழித்தடம் தெரியாமல் கரும்பாலம் பகுதியை நோக்கி சென்றனர்.
அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி ஓடி காட்டேரி-கரும்பாலம் இடைபட்ட தூரத்தில் உள்ள சுமார் 15 அடி பள்ளத்தில் உள்ள தேயிலை தோட்டத்தின் மீது தலைகுப்புற கவிழுந்தது. காரில் பயணித்த 3 வாலிபர்களுகும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பின் அப்பகுதியில் கூடிய வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு, பேருந்து மூலம் மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post குன்னூர் அருகே தேயிலைத் தோட்டத்திற்குள் கார் கவிழ்ந்து விபத்து 3 பேர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.