மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளியை சூறையாடிய பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயிலும் 4-ம் வகுப்பு மாணவிக்கு, பள்ளி நிர்வாகியும், தாளாளர் சுதாவின் கணவருமான வசந்தகுமார்(54) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று, அங்கிருந்த வசந்தகுமாரைத் தாக்கினர்.