கோவை, வேலூர், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

2 hours ago 2

சென்னை: கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், வேலூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சோலையாரில் 7 செ.மீ., சின்கோனாவில் 6 செ.மீ. மழை பதிவாகியது.

Read Entire Article