மசோதாக்களை நிறுத்திவைக்கும் வகையில் 4-வதாக ஒரு முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது: தமிழ்நாடு அரசு

3 months ago 12

டெல்லி: மசோதாக்கல் மீது முடிவு எடுப்பதற்காக தனி விருப்புரிமை ஆளுநருக்கு கிடையாது என தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார்.

தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் தரப்பு வாதங்களை இன்று முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியல் சாசன பிரிவு 200 குறித்த விரிவான வாதங்களை ராகேஷ் திவேதி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்தார்.

மேலும், காரணம் எதுவும் தெரிவிக்காமல் மசோதாக்களை நிறுதிவைத்துள்ளார். ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின்னர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது எப்படி முடியும்? மசோதாக்களை நிறுத்தி வைத்த பின்னர், பிறகு எப்படி குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு மசோதாக்களை அனுப்ப முடியும்?ஆளுநர் முடிவெடுக்காமல் நிறுத்தி வைக்கிறார் என்றால், அது செல்லாது என முன்னர் வாதம் வைத்தீர்கள், அப்படியெனில் செல்லாத மசோதாவை குடியரசு தலைவர் முடிவுக்கு எப்படி அனுப்ப முடியும் ? என அடுக்கடுக்கான கேள்விகளை தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் முன்வைத்தார்.

பல்கலைக்கழக துணை வேந்தர் தேர்வு குழுவில் ஆளுநர் தலையிட்டு தடுக்கிறார். எனவே வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் வகையில் திருத்த மசோதா இயற்றப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார் என தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இதனை அடுத்து மசோதா மீது ஆளுநர் எடுக்கும் முடிவு வெளிப்படையாக மாநில அரசுக்கு ஏன் தெரிக்கப்பட வில்லை? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஆளுநர் தரப்பு; துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரை நீக்குவது என்ற முடிவு, ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் செயல். அதிகாரம் அனைத்தையும் மாநில அரசே வைத்து கொள்ள வேண்டும் என்பதே அதன் அர்த்தம் என வாதிட்டனர்.

The post மசோதாக்களை நிறுத்திவைக்கும் வகையில் 4-வதாக ஒரு முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Read Entire Article