3 முறை நீட் தேர்வு எழுதிய மாணவர் தூக்கிட்டு தற்கொலை: ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றவர்

4 hours ago 2

சேலம்: சேலம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சன். டிங்கரிங் பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி யோகலட்சுமி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் வேலை செய்து வருகிறார். இவர்களின் மகன் கவுதம் (20). இவர் கடந்த 2023ம் ஆண்டு பிளஸ் 2 முடித்தவுடன் நீட் தேர்வை எழுதினார். அதில் அவர் தேர்ச்சி பெற முடியவில்லை. 2வதாகவும் நீட் தேர்வு எழுதினார். அதிலும் வெற்றி பெற முடியவில்லை. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

இதையடுத்து அவரை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். தனியார் மருத்துவமனையிலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் மாணவர் கவுதம் மீண்டும் படித்தார். 3வது முறையாக தற்போது அவர் நீட் தேர்வை எழுதியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாணவர் கவுதம், ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றதும் அவரை 3 முறையும் பெற்றோர் காப்பாற்றி விட்டனர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post 3 முறை நீட் தேர்வு எழுதிய மாணவர் தூக்கிட்டு தற்கொலை: ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றவர் appeared first on Dinakaran.

Read Entire Article