தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி – 1 கப்
உருளைக்கிழங்கு – 2
தக்காளி – 1
பூண்டு – 3 பல்
இஞ்சி – ஒரு துண்டு
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
புளிச்சாறு – 2 ஸ்பூன்
இலவங்கப்பட்டை – 1 துண்டு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1 கப் பச்சை பட்டாணியை 5 முதல் 7 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.பச்சை பட்டாணி நன்கு ஊறியதும் உருளைக்கிழங்கை நறுக்கி இரண்டையும் குக்கரில் போட்டு போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வரை விட்டு வேகவைக்கவும்.பிரஷர் குக்கர் ஆறியவுடன் மூடியைத் திறந்து பாதி பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை தனியாக எடுத்துக்கொண்டு நன்றாக மசித்துக் கொள்ளவும். – ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஒரு சிறிய இலவங்கப்பட்டை, வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். – இந்த கலவை நன்கு வதங்கியதும் தனியாக எடுத்து ஆறவைத்து மிக்சியில் பேஸ்ட் போல அரைக்கவும்.பின்னர் கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி வெங்காயம் தக்காளி விழுது சேர்த்து வதக்கி பின் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், புளிச்சாறு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். – 3 முதல் 5 நிமிடம் வரை இதை கொதிக்க விடவும், பின்னர் அதில் உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து 7 – 8 நிமிடங்கள் வேகவைக்கவும். – இப்போது தனியாக மசித்து வைத்த உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை இதில் சேர்த்து சில் நிமிடம் கொதிக்க விடவும். – நன்கு வெந்து வந்ததும் இதில் பச்சை வெங்காயம் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான சாலையோர சுவையான மசாலா சுண்டல் ரெடி!
The post மசாலா சுண்டல் appeared first on Dinakaran.