மங்களூரில் பரபரப்பு சம்பவம் பட்டப்பகலில் கூட்டுறவு வங்கியில் ரூ.12 கோடி தங்க நகைகள் கொள்ளை: முகமூடி அணிந்த மர்மநபர்களுக்கு வலை

3 hours ago 3

மங்களூரு: மங்களூரு அருகே கூட்டுறவு வங்கியில் பட்டப்பகலில், முகமூடி அணிந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், சுமார் ரூ.12 கோடி தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்களூரு அருகே உள்ளால் அடுத்த கோட்டைக்கார் கேசி சாலையில் கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் வங்கி திறக்கப்பட்டு, ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். சுமார் 11:30 மணியளவில் வங்கியின் முன் ஒரு கார் வந்து நின்றது.

அதில் இருந்து முகமூடி அணிந்து கொண்டு வங்கியின் உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கைத் துப்பாக்கி, அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி, அங்கிருந்த ஊழியர்களை மிரட்டினர். அப்போது, இந்தியில் பேசிய மர்மநபர்கள், பெட்டகத்தில் இருந்த தங்க நகைகள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்து, காரில், மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.12 கோடி என கூறப்படுகிறது. தகவலறிந்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில், மர்மநபர்கள் கருப்பு நிற காரில் தப்பி சென்றது தெரிந்தது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பீதரில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த ஏஜென்ஸி ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.93 லட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தை ெதாடர்ந்து மங்களூருவில் நடந்துள்ள வங்கி கொள்ளையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post மங்களூரில் பரபரப்பு சம்பவம் பட்டப்பகலில் கூட்டுறவு வங்கியில் ரூ.12 கோடி தங்க நகைகள் கொள்ளை: முகமூடி அணிந்த மர்மநபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article